க்ரைம்

பிறந்தநாளா கொண்டாடுறிங்க..! உருட்டுகட்டையால் துரத்தி துரத்தி அடித்த கும்பல்!!  

சேலம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இரண்டு குழுவினர் மதுபோதையில் உருட்டுக் கட்டையுடன் மோதிக் கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சேலம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இரண்டு குழுவினர் மதுபோதையில் உருட்டுக் கட்டையுடன் மோதிக் கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே ஒரு சிலர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குழுவினர், முன்விரோதம் காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தடுக்க வந்தவர்களுக்கும் தர்ம அடி விழுந்ததில், பெண் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார், திமுகவைச் சேர்ந்த சிவகுமார், பாஜகவைச் சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்ததோடு, தலைமறைவான 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.