க்ரைம்

வலுக்கட்டாயமாக பெண்ணை குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரர்கள்!!

தலைமறைவான குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு..!

Malaimurasu Seithigal TV

தாவணகெரே தாலுகா மாசரஹள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்த ஒரு பெண் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். அந்த பெண் தனது சகோதரிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் அந்த பெண் தனது சகோதரியின் நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, அங்கு குடிப்போதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் அவரது நண்பர் கிரண் இருவரும் வந்துள்ளனர். அப்போது வயலில் தனியாக நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் பிரபுவும், கிரணும் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த கிரணும், பிரபுவும் தாங்கள் கையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை பிரபுவும், கிரணும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அப்போது அந்த பெண் வலியால் சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார். அந்த சமயம் அவ்வழியாக சென்ற ஒரு நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார். இவரை பார்த்ததும் இருவரும் தப்பித்து சென்று விட்டனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய அந்தப்பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக  பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.