க்ரைம்

சம்பல் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளையர்கள் இருவர் கொலை: எஸ்எஸ்பி முனிராஜ் அதிரடி நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலத்தில் சம்பல் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளை கும்பலின் தலைவன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். 

Malaimurasu Seithigal TV

கடந்த வாரம் ஆக்ராவைச் சேர்ந்த டாக்டர் உமகாந்த் குப்தா கடத்தப்பட்ட வழக்கில், ஒரு இளம்பெண் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை கும்பலின் தலைவன் பதன் சிங் தோமர் தலைமறைவானார். இவரது தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆக்ராவின் எல்லையிலுள்ள கச்சாபுரா பகுதியில் இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற கொள்ளையர்களை போலீசார் துரத்தி சென்று சுற்றி வளைத்தனர்.

அதில்  பதன்சிங் தோமரும் இருப்பதாகத் தெரிந்துள்ளது. இதை அறிந்த எஸ்எஸ்பி முனிராஜ் நேரில் சென்றார். அங்கு இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பதன் சிங் தோமர், அக்சே பாண்டே என இருவர் கொல்லப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த எஸ்எஸ்பி முனிராஜின் இந்த துணிகர நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.