க்ரைம்

குளத்தில் கிடைத்த அடையாளம் தெரியாத தாய் மகள் உடல்!- விசாரணை!!!

ஸ்ரீவில்லிப்புத்தூரில், குளத்தில் அடையாளம் தெரியாத தாய் மகள் உடல் மீட்கப்பட்டது.

Malaimurasu Seithigal TV

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில் திருமுக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் குளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பொதுமக்கள் குளிக்க சென்றபோது குளத்தில்  அடையாளம் தெரியாத  இரண்டு பெண் சடலம் மிதந்துள்ளது. உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளத்தில் மிதந்த இரண்டு பெண் சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இருந்த பெண்கள் யார் என்றும், குளத்தில்  குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார்களா  இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா என ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.