Ex-fiancée acid attack 
க்ரைம்

"இந்த மாப்பிள்ளை வேண்டாம்.." திருமணத்தை நிறுத்தியதால் பெண்கள் மீது ஆசிட் வீச்சு! போதை ஆசாமியின் வெறிச்செயல்

ஆத்திரமடைந்த பாட்டி இரவு ஒரு பாட்டிலில் அமிலத்துடன் (ஆசிட்) பெண்ணின் வீட்டிற்கு வந்ததாக குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

Vinvizhi Leninton

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாப்பூரில், நடக்கவிருந்த திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதால் மாப்பிள்ளையாகவிருந்த ஒருவர் தனது முன்னாள் வருங்கால மனைவி மற்றும் அவரது சகோதரியை அவர்களது வீட்டிற்கே சென்று ஆசிட் வீசி தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இரு பெண்களும் படுகாயம் அடைந்ததாக காவல்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த குற்றவாளியான ஹர்ஷ் பாட்டி, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தையின் கூற்றுப்படி, அவரது மகளுக்கு பாட்டியுடன் முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாட்டிக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பது பெண்ணின் வீட்டாருக்கு பின்னர்தான் தெரியவந்துள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் அந்தத் திருமணத்தை நிறுத்த செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாட்டி சனிக்கிழமை இரவு ஒரு பாட்டிலில் அமிலத்துடன் (ஆசிட்) அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததாக குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

கதவைத் திறந்தபோது, ​​அவர் தனது முன்னாள் வருங்கால மனைவி மீது ஆசிட்டை வீசியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அவரது சகோதரி தலையிட முயன்றபோது, ​​பாட்டி அவர் மீதும் ஆசிட் வீசியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இரு பெண்களின் அலறல் சத்தம் கேட்டு வந்துள்ளனர். அப்போது பாட்டி வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார் . அப்போது அவரை பெண்ணின் வீட்டார் பிடித்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே சிம்பாவலி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளனர். காயமடைந்த சகோதரிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக வட்ட அதிகாரி ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார். விசாரணையின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.