Extramarital affair dispute Extramarital affair dispute
க்ரைம்

"அம்பலமானது கணவனின் பலவருட கள்ளக்காதல்.." கையும் களவுமாக சிக்கிய காவலர்! மனைவியை கொல்ல முயன்று தற்கொலை நாடகம்!

கணவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

திருமணத்திற்குப் புறம்பான உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், பின்னர் அந்தத் தாக்குதலைத் தற்கொலை முயற்சி எனக் காட்ட முயன்றதாகவும் கூறப்படும் உத்தரப் பிரதேச காவலர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் லோனி உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் குற்றம் சட்டப்பட்டுள்ளவர் பர்வேஸ் ஆலம். இவர் ஜூன் 26 அன்று தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரை ஒரு துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இன்னும் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண், திடுக்கிடும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். கணவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், தனது சகோதரி ஷாமா பிரவீன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக பர்வேஸ் தனது மகன் முனவ்வருக்குத் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறி, அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும், "ஷாமாவை விஜய் நகரில் உள்ள ஃப்ளோரஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக பர்வேஸ் தெரிவித்துள்ளார். போலீசார் அங்கு சென்றபோது, ​​அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்துள்ளார். பின்னர் அவர் நொய்டாவின் செக்டர் 62-ல் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அப்பெண்ணின் தந்தை கசீம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் கழித்து ஷாமா சுயநினைவு பெற்றபோது, ​​கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பர்வேஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளார். இதனால் தன்னை அடிக்கடி உடல்ரீதியாகத் தாக்கி வருவதாகவும் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். பர்வேஸ் ஷாமாவை பலமுறை கொல்ல முயன்றதாக தன் மகள் கூறியதை கசீம் தெரிவித்தார். அன்று பிற்பகல் சுமார் 3.15 மணியளவில், ஷாமாக்கும் பர்வேஸுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது பிரதாப் விஹாரின் செக்டர் 12-ல் உள்ள தங்களது வீட்டில் ஒரு அறையில் அவர் தன்னைப் பூட்டி வைத்துத் தாக்கியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அவர், ஷாமாவை மற்றொரு அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ஒரு துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. அவர் சுயநினைவை இழந்தபோது, ​​பதற்றமடைந்த பர்வேஸ், அவரது குடும்பத்தினரை அழைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.