குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக நூறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதைக் கேட்டதும், அரிசோனாவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியான பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, 42 வயதான மருத்துவமனை ஊழியரான ஜோஷுவா ஜேம்ஸ் லோசானோ கடந்த திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லோசானோவிற்கு இணையச் சேவை வழங்கிய நபரின் மூலம் குழந்தைகளின் ஆபாசமான உள்ளடக்கம் இருந்த வீடியோக்கள் அனுப்பப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், காணாமல் போன மற்றும் பாலியல் ரீதியாக இந்த குற்றம் தொடர்பாக குழந்தைகளுக்கான தேசிய மையம் புலனாய்வாளர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. பதிவுகளின்படி, அதிகாரிகள் ஒரு இணைய கணக்கு, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரியை நேரடியாக அந்த மருத்துவமனை ஊழியரை கண்டறிந்து, அவரை கடந்த வியாழக்கிழமை அவரைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நடந்த விசாரணையின் போது, மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆஷ்லி ஸ்டெட்ஸன் 150,000 டாலர் பிணைத்தொகையைக் கோரியதோடு, லோசானோ மீது சிறுவர்களை பாலியல் ரீதியாகச் சுரண்டியது தொடர்பான தொடர்ச்சியான 10 கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
அந்த பெண் செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் அனுபவிக்க வேண்டிய குற்றங்கள் என்று பார்த்தால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும், அதன் விளைவாக அவர் செய்த ஒட்டுமொத்த குற்றத்திற்கு சேர்த்து 100 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை அந்த பெண் கேட்டடத்த்தும் உடனடியாக அவர் மயங்கி விழுந்ததாக காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மருத்துவப் பணியாளர்கள் லோசானோவிற்கு உதவுவதற்காக விசாரணையை தற்காலிகமாக நிறுத்தியதாகவும், பின்னர் அவர் மீண்டும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோசானோவின் வழக்கறிஞர், அவருக்கு விதித்திருந்த ஜாமீன் தொகையை $50,000 ஆகக் குறைக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நீதிபதி லோசானோவின் ஜாமீன் தொகையை 150,000 டாலராக இறுதியில் நிர்னையித்துள்ளார்.
மேலும், லோசானோ ஜாமீன் தொகையை செலுத்தி சிறையில் இருந்து வெளியே வந்தாலும், சிறுவர்களை தொடர்புகொள்வதற்கும், ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் ஒரு மின்னணு கண்காணிப்புக் கருவியையும் அணிய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லோசானோ செப்டம்பர் 21 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்