உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் தனது மனைவியின் தாயின் சகோதரியான 45 வயது பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடம்பிடித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 பிள்ளைகளின் தாயான அந்தப் பெண்ணும் இளைஞருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறப்படுவதால், குடும்பத்தில் கடும் குழப்பமும் மோதலும் ஏற்பட்டுள்ளது. மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தேஜ்வீர் என்பவருக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது மனைவியின் சித்தி 45 வயது பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லதாவிற்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கணவரை இழந்த நிலையில் 5 பிள்ளைகளுடன் லதா தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அடிக்கடி தனது மனைவியுடன் தேஜ்வீர் லதாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது லதாவிற்கும் தேஜ்வீர்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, இருவரையும் பிரித்து வைக்க உறவினர்கள் முயன்றுள்ளனர். ஆனால், தாங்கள் ஒருவரையொருவர் பிரிய விரும்பவில்லை என இருவரும் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தேஜ்வீர் லதாவை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
மேலும் தேஜ்வீர் “தான் அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அவரும் தன்னை விரும்புவதால் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், மேலும், தனது மனைவி தன்னுடன் வாழ்கிறாரா இல்லையா என்பது குறித்து தனக்கு கவலை இல்லை. அந்தப் பெண்ணின் 5 பிள்ளைகளையும் தங்களுடன் வைத்துப் பராமரிக்கத் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு லதாவின் பிள்ளைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவரது மூத்த மகன் அன்ஷுல், மற்றும் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது தனது தாயும் தேஜ்வீரும் கடும் கோபமடைந்ததாக கூறியுள்ளார். மேலும், இருவரையும் பிரிக்க முயன்றபோது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தீ வைக்க அவர்கள் முயன்றதாகவும் அன்ஷுல் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஒன்றாக வாழ்வோம், இல்லையென்றால் சுட்டுப் பொசுக்கி விடுவோம்” என்று தனது தாயார் தங்களை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தீ வைக்க முயற்சி நடந்ததா, குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாமியார் உறவு உள்ள பெண்ணுடன் வாலிபர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து திருமணம் செய்து கொள்வதாக கூறிய விவகாரம், ஒருபுறம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்