க்ரைம்

“கால்களை உடைத்து.. இளம் பெண் கொடூர கொலை” - 70 கி.மீ சடலத்துடன் பயணித்த வாலிபர்.. 5 லட்சத்திற்கு தங்கையை கொன்ற அண்ணன்!

இந்த பிரச்சனையால் அண்ணன் ராம் அஷிஷ்க்கு தங்கை மீது வெறுப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

உத்தரபிரதேசம், கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்கு நிஷாந்த். இவருக்கு 32 வயதில் ராம் ஆஷிஷ் என்ற மகனும், 19 வயதில் நீலம் என்ற மகளும் இருந்த நிலையில் நிஷாந்த விவசாயம் செய்து குடும்பத்தை பார்த்து வந்தார். அப்போது அம்மாநில அரசு நான்கு வழி சாலை அமைக்க விவசாய நிலத்தை எடுத்து கொண்ட நிலையில் அதற்கான இழப்பீடு தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளது. இந்த பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் செய்து விடலாம் என நினைத்த நிஷாந்த் பணத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருக்கிறார்.

இதனை தெரிந்து கொண்ட ராம் ஆஷிஷ் பணத்தை கேட்டு அவரது தந்தை நிஷாந்திடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு நிஷாந்த் “இந்த பணம் நீலம் திருமணத்திற்கு மட்டும் தான் வேறு எதற்காகவும் யாரும் பணத்தை எடுக்க வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார். இதனால் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையால் அண்ணன் ராம் அஷிஷ்க்கு தங்கை மீது வெறுப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீலம் மற்றும் அவரது அண்ணனை தவிர மற்ற அனைவரும் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றுள்ளனர்.

எனவே வீட்டில் நீலம் மட்டும் தனியாக இருந்திருக்கிறார், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராம் ஆஷிஷ் தனது தங்கை இருந்தால் தானே அவரது திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வார்கள் என எண்ணி அவரை கொலை செய்ய முடிவு செய்து தங்கையின் அறைக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி கால்களை உடைத்து, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை வீட்டில் இருந்த சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று 70 கிலோ மீட்டர் தூரத்தில் குஷி நகர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு திரும்ப வீட்டிற்கு சென்றுள்ளார்.

விடிந்தது கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற விவசாயிகள் மூட்டையில் இருந்து ரத்த வடிந்ததை பார்த்து மூட்டை பிரித்து பார்த்துள்ளனர், அதில் இளம் பெண்ணின் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்ததில் சொந்த அண்ணனே தங்கையை கொலை செய்து உடலை கொண்டு வந்து வீசியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராம் ஆஷிஷை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.