saravana pandi Admin
க்ரைம்

“சம்பந்தமே இல்லாத சண்டை” - பேச வந்தது ஒரு பாவமா.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்!

நண்பர்களுடன் மோகன்ராஜை தாக்குவதற்காக கத்தி மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன்

Anbarasan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அருகே உள்ள ஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், இவருக்கும் அதே பகுதியில் மாற்று சமுதாயத்தை சார்ந்த வினோத் குமார் என்பவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளிக்க சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக மோகன்ராஜ் வினோத்குமாரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த சரவண பாண்டியன் தனது நண்பரான ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த முனீஸ் என்பவருக்கு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சரவண பாண்டியனும் மோகன்ராஜ் அதே பகுதியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்திற்கு பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதை அறிந்த வினோத்குமார் முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் மோகன்ராஜை தாக்குவதற்காக கத்தி மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளார், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது சரவண பாண்டியன் தடுத்துள்ளார். இதனால் வினோத் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சரவண பாண்டியனையும் சேர்த்து தாக்கியுள்ளனர்.

இதில் மண்வெட்டியால் பலத்த காயம் அடைந்த சரவணன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மோகன் ராஜ் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன் தகவல் அறிந்த, வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவண பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

நண்பரின் முன் பகையினால், பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத சரவண பாண்டியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்