க்ரைம்

“வீட்டில் தனியாக இருந்த பெண்” - துணி துவைக்க கட்டப்பட்ட கல்லில் போய்.. பேர்ணாம்பட்டில் கொடூரம்!

இந்நிலையில் பல்லவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சூழலில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர்

Mahalakshmi Somasundaram

பேர்ணாம்பட்டு அடுத்துள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் இவருக்கு திருமணமாகி பல்லவி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் இவர் அதே பகுதில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

பிள்ளைகள் வெளியில் தங்கி படித்து வரும் சூழலில் மோகன்ராஜ் கடையில் இருந்துள்ளார். இந்நிலையில் பல்லவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சூழலில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர் கூர்மையான ஆயுதத்தை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த ஆயுதத்தை வைத்து பல்லவியின் கழுத்தில் குத்தி, அவரின் வீட்டிற்கு பின்புறம் துணிகளை துவைக்க அமைத்திருந்த பகுதிக்கு பல்லவியை இழுத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர் பல்லவியிடமிருந்தா ஐந்து சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

கழுத்தில் காயம் பட்டதால் பல்லவி மிக சிரமப்பட்டு சத்தம் போட்டுள்ளர், பல்லவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பல்லவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வேலூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார் பல்லவி.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பல்லவி, இது குறித்து காவல் துறையில் புகாரளித்த நிலையில் பேர்ணாம்பட்டு அதே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.