விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அப்போது சங்கருக்கும் அவருடன் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அம்பிகா என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அம்பிகா அவரது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
சங்கர் வேலையே முடித்து விட்டு தனது வீட்டிற்கு கூட செல்லாமல் எப்போது அம்பிகாவின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இருவேல்பட்டு பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் அடிக்கடி வேலையின் காரணமாக மரகதபுரம் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அன்புவுடன் அம்பிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டு எப்போதும் இருவரும் போனில் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த சங்கர் அம்பிகாவை அன்புவிடம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அம்பிகா பேசி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் ஒரு நாள் அம்பிகையிடம் இதை பற்றி கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அம்பிகா மூலமாகவே அன்புவிற்கு போன் செய்து “இனி மேல் இவளிடம் பேசக்கூடாது நானும் அவளும் பல வருடங்களாக பேசி வருகிறோம் அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்” என மிரட்டியுள்ளார். அதற்கு அன்பு அம்பிகாவிற்கு எண்ணுடன் பேச பிடித்திருக்கிறது எனவே நான் பேசுவேன் என கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சங்கர் அன்புவை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபத்தில் இருந்த அன்பு சங்கரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி தனது நண்பர்களை தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்ட அன்பு இரவு அம்பிகா வீட்டிற்கு சென்று அங்கு உறங்கிக்கொண்டிருந்த சங்கரை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். அது மட்டுமல்லாமல் அவரது கண்களை காயப்படுத்தியும், ஆணுறுப்பை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினரை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அம்பிகையிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளனர். மேலும் சங்கரை காயப்படுத்திவிட்டு தப்பித்து சென்ற அன்பு மற்றும் அவரது நண்பர்களை மோப்ப நாயின் உதவியுடன் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சனையால் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு ஆணுறுப்பு அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.