விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையம் செல்லும் சாலை அடுத்துள்ள அண்ணா காலனி சிவன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 29 வயதுடைய முத்தையா என்ற முரளி. இவர் கட்டிடங்களில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்யும் வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் நேற்று பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய முரளி தனது வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வம் மற்றும் மணிகண்டன் ஆகிய இரு இளைஞர்கள் முரளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரது முகம் மற்றும் கழுத்தில் சாராமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். வெட்டுப்பட்டு படுகாயமடைந்த முரல் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த முரளிக்கும் அண்ணா காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், எனவே முன் விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் அண்ணா காலனியைச் சேர்ந்த 26 வயதுடைய செல்வம் மற்றும் ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த பழனி 25 வயதுடைய மணிகண்டன் ஆகிய சுமை தூக்கும் தொழில் செய்து வரும் இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், தங்கள் இருவருக்கும் பராசக்தி காலனியைச் சேர்ந்த சரவணப்பிரபு என்பவருக்கு மிடையே அப்பகுதியில் யார் கெத்து காட்டுவது என்பதில் விரோதம் ஏற்பட்ட போது நடந்த பிரச்சனையில் முரளிதரன், சரவண பிரபுவுக்கு ஆதரவாக செல்வத்தைக் கண்டித்துள்ளார்.
இதனால் முரளிதரன் மீது ஆத்திரம் கொண்ட செல்வம் தனது மனதில் வன்மத்துடன் இருந்த நிலையில் கஞ்சா புகைக்கும் பழக்கமுடைய செல்வம் வழக்கம் போல அவரது நண்பர் மணிகண்டனுடன் வழக்கமாக கஞ்சா விற்பனை நடக்கும் இடத்திற்கு கஞ்சா வாங்க சென்ற போது அங்கு கஞ்சா விற்பனை நடைபெறாத நிலையில் அதிரமடைந்துள்ளார். அப்போது அதே பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த முரளியிடம் முன்பகையை மனதில் வைத்து செல்வம் மற்றும் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் முரளியின் முகம் மற்றும் கழுத்தில் மாறி மாறி வெட்டி விட்டு தப்பிச் சென்றது ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். முன்பகையிலும் கஞ்சா கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.