மேற்கு வங்கம் மாநிலம், துர்காபூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் ஒடிஷாவை சேர்ந்த பூனம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பூனம் அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் அவ்வப்போது இரவு 8 மணியளவில் வெளியில் சென்று கல்லூரி விடுதிக்கு அருகில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு மீண்டும் கல்லூரி வழக்கத்திற்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.
அதே போல் சில தினங்களுக்கு முன்பு இரவு உணவருந்தி விட்டு கல்லூரி வழக்கத்திற்கு நடந்து சென்ற போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களின் தாக்குதலால் கல்லூரி மாணவன் மயக்கம் அடைந்த நிலையில் மாணவியை சிறுது தூரம் தள்ளி வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற மர்ம கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் மாணவியின் போனை பறித்து கொண்டு அவரை மற்றவர்களுக்கு தகவல் சொல்ல விடாமல் தடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மயக்கம் தெளிந்து மனைவியின் காதலன் அப்பகுதி வந்த போது அவர்களிடம் “இதை வெளியில் சொன்னால் இருவரையும் சேர்த்து கொன்று புதைத்துவிடுவோம்” என கூறி அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் தனக்கு நடந்த கொடுமையை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி மற்றும் அவரது காதலனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் போதுமான அளவு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத நிலையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றதால் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் மற்ற ஆண்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.