உத்திரபிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு வெல்டிங் கடையில் புகுந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து கடைகாரர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த அவர் தான் மிகவும் கடினப்பட்டு கடன் வாங்கிய நிலையில் அந்த கடையை வைத்து நடத்தி வருவதாகவும் நான் ஏழை எனவும் தெரிவித்து கதறியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் திருடிய கடைகாரரை பற்றி சிறு தகவல்களை சேகரித்த வண்ணம் இருந்துள்ளனர்.
கடைகாரரை பற்றிய தகவல்களை சேகரித்து வந்த நிலையில் அவரின் பொருளாதார தரத்தை பற்றி அறிந்து கொண்டு, கொள்ளையர்கள் திருடிய பொருட்களோடு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளதாவது, தாங்கள் ஏழை என்பதை அறியாமல் திருடிவிட்டதாகவும், இனிமேல் நாங்கள் ஏழையிடம் திருடுவதாக இல்லை என அதில் எழுதி அதனுடன் எங்களை மன்னித்து விடுங்கள் என அவரிடம் கேட்கும் படியாக கடிதத்தை எழுதி திருடிய பொருட்களை அதனுடன் வைத்துள்ளனர்.
கடைகாரரான தினேஷ் திவாரி கடைக்கு வெளியே திருடப்பட்ட அனைத்து பொருட்களும் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.மேலும் இந்த சம்பவத்தை கண்டு போலீசாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து அப்பகுதியிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.