க்ரைம்

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்! இரட்டை கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்?

பூஜா தேவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார், அப்போது கணவர் சோனு வீட்டில் இல்லை...

Muthu Lakshmi

பீகார் மாநிலத்தில் மனைவி மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த கள்ளத்காதலனை, கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்த இருவரையும் ஒன்றாக பார்த்த ஆத்திரத்தில் இந்த கொடூர கொலையில் ஈடுபட்டதாகக் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பார் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் லஹேரி. இவருக்கும், பண்டாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பா டோலி பஸ்தி பகுதியைச் சேர்ந்த பூஜா தேவிக்கும் (28) இடையே ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதாகவும், இருவரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்ததாகவும் சொல்லப்டுகிறது. பூஜா தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி சோனு லஹேரி என்ற கணவர் உள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரோஹித் தனது கள்ளக்காதலி பூஜா தேவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கணவர் சோனு வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் திடீரென வீட்டிற்கு வந்த சோனு, தனது மனைவி பூஜாவையும் அவரது கள்ளக்காதலன் ரோஹித்தையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இருவரும் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த சோனு, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தனது மனைவி பூஜா தேவி மற்றும் பேஸ்புக் காதலன் ரோஹித் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சோனு, தனது மனைவியின் தலையை தனியே துண்டிக்கும் துண்டித்துள்ளார். 

ஒரே வீட்டில் இரண்டு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்டாரா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரிந்தனர். அங்கு கொலைசெய்யப்பட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இரட்டைக் கொலை தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சோனு லஹேரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இதுகுறித்து பண்டாரா காவல் நிலையப் பொறுப்பாளர் மனோஜ் குப்தா கூறுகையில், இந்த இரட்டைக் கொலைக்கு காரணம் கள்ளக்காதல் விவகாரம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் சம்பவம் நடந்த சூழல் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்டதாகக் கூறப்படும் பழக்கம், திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இரட்டைக் கொலை என இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் மனைவியையும் அவரின் காதலனையும் கணவன் கொலை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.