க்ரைம்

“மனித உடலை வெட்டி கிரைண்டரில் போட்ட பயங்கரம்” - பாலித்தீன் பைகளில் வீசப்பட்ட பாகங்கள்..கள்ளக்காதலால் இப்படியும் செய்வார்களா?

இந்நிலையில் ரூபிக்கு அதே பகுதியை சேர்ந்த கௌரவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்...

Mahalakshmi Somasundaram

உத்திரப்பிரதேச மாநிலம், சாம்பல் மற்றும் சந்தௌசி ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் கடந்த (டிச 18) ஆம் தேதி அங்கங்கே ரத்தக்கறையுடன் பாலித்தீன் பைகள் இருப்பதாக தகவல் அளித்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலித்தீன் பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்ததில் அதிலிருந்து மனித உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடற்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட துண்டாக இருந்த கை பாகத்தில் போடப்பட்டிருந்த டாட்டூவை வைத்து இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கடந்த (டிச 18) ஆம் தேதி ரூபி என்ற பெண் ஒருவர் தனது கணவர் ராகுலை காணவில்லை என புகாரளித்திருக்கிறார். எனவே அந்த பெண்ணை அழைத்து ராகுல் குறித்தும் அவரது கையை குறித்தும் கேட்ட போது அவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்திருக்கிறார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த ராகுல் என்பவருக்கும் ரூபிக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரூபிக்கு அதே பகுதியை சேர்ந்த கௌரவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ரூபி மீது சந்தேகமடைந்த ராகுல் இது குறித்து அவரிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் எதையும் வெளியில் கூறாத ரூபி தனது உறவு குறித்து கணவருக்கு தெரிந்து விடக்கூடாது என எண்ணி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் அதன்படி அவரை அடித்து கொலை செய்து விட்டு உடல் யாருக்கும் கிடைக்க கூடாது, என நினைத்து ராகுலின் உடலை சிறு துண்டுகளாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்து பின்னர் அதனை பாலித்தீன் பைகளில் கட்டி ஊரை சுற்றி அங்கங்கே வேசி சென்றது தெரியவந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.