ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் தர்மவரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயதுடைய கோட்டிரெட்டி. இவர் உள்ளூர் கிராமப்புற மருத்துவ பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 20 வயதில் பிரக்யா என்ற மகள் உள்ள நிலையில் அவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் காலை பணிக்கு செல்லும் கோட்டிரெட்டி மீண்டும் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்த நிலையில் கோட்டிரெட்டி இரவு வீட்டிற்கு சென்ற பிறகும் மனைவி மனைவி மற்றும் மகளுடன் பேசாமல் எப்போதும் போனில் மூழ்கி இறந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆதிலட்சுமி கணவனின் செயல்கள் கண்காணித்த போது அவர் தன்னிடம் சிகிச்சை வரும் பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஆனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஆதிலட்சுமி தொடர்ந்து கணவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கோட்டிரெட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோட்டிரெட்டி, ஆதிலட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மனைவி பலமுறை அறிவுரை கூறியும் மருத்துவர் கோட்டிரெட்டி பெண்களுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளாமல் இருந்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி கணவர் கோட்டி ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த (ஏப் 12) ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோட்டிரெட்டிக்கு பாயாசத்தில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
பின்னர் அவர் மயக்கமடைந்த நிலையில் தனது மகள் பிரக்யா மற்றும் ஒரு உறவினரின் உதவியுடன் கட்டையால் கணவரை அடித்து கொலை செய்த ஆதிலட்சுமி கொலை மறைக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து விடியும் வரை காத்திருந்து போலீசார் போன் செய்து “இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரை அடையாளம் தெரியாத கும்பல் அடித்து கொலை செய்து விட்டனர்” என தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த கோட்டிரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற் கட்ட விசாரணையில் கோட்டிரெட்டி வீட்டிற்கு எந்த மர்ம கும்பலும் வரவில்லை என்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இறுதியாக போலீசார் ஆதிலட்சுமியிடம் விசாரணை செய்தது மனைவியே கணவனை அடித்து கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்