தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் நாயக். இருக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்மா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமண் நாயக் கர்னூல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் அவரது மனைவி பத்மாவிற்கு அய்யம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் பனி கிடைத்துள்ளது. எனவே குடும்பத்துடன் அய்யம் பேட்டை பகுதிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
அப்போது பத்மாவிற்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஏற்கனவே திருமணமான கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் கோபி அடிக்கடி பத்மா வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனை அறிந்த லட்சுமண் நாயக் தனது மனைவி பத்மாவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது இருப்பினும் அவர் தொடர்ந்து கோபியுடன் பழகி வந்திருக்கிறார்.
எனவே ஏற்கனவே குடிப்பழக்கம் உடைய லட்சுமண் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தின்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்திருக்கிறார். எனவே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்ட பத்மா கடந்த (நவ 24) குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த லட்சுமண் நாயக்கை கோபியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் காலை விடிந்ததும் எதுவும் தெரியாதது போல பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி இருக்கிறார். லட்சுமண் மயங்கி கிடந்ததை பார்த்த அவரது விட்டு உரிமையாளர் பத்மாவிற்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு வந்த பத்மா கணவர் இறந்து விட்டதாக கதறி அழுதுள்ளார். மேலும் உறவினர்கள் தகவல் தெரிவித்து விட்டு இறுதி சடங்கிற்கு தயார் செய்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லட்சுமண் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பத்மாவிற்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியருடன் கள்ள தொடர்பு இருந்ததும் அதற்கு தடையாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்று நாடகமாடியதும் தெரியவந்தது. எனவே பத்மா மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.