ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் நடந்த ஒரு கொலை வழக்கில், ஒரு பெண் தனது கணவரைக் கொன்று, அவரது குடல்களை வெளியே எடுத்து பின்னர் பத்தற்றத்தில் மடியில் இருந்து குதிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜேஷும் அவரது மனைவி விமலா தேவியும் குருக்ஷேத்திரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கொலை நடந்த அன்று, மாலை 5 மணியளவில் இருவரும் சண்டையிட்டு கத்துவதைக் கேட்டதாக ஹவுஸ் ஓனர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் சத்தம் கேட்டு, மாடிக்கு வந்துள்ளார்.
காவல்துறை விசாரணையில், ராஜேஷ் அடிவயிற்றில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரின் உடலில் பல வெட்டு காயங்கள் இருந்ததாகவும், அதில் அவரது குடல் வெளிய வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலேயும் அந்த குடல்களை மனைவி விமலா ஒரு பையில் போடுவதை வீட்டு உரிமையாளர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஹவுஸ் ஓனரை பார்த்ததும், அந்தப் பெண் பதற்றத்தில் மாடியில் இருந்து குதித்துள்ளார். கீழே விழுந்ததில் காயமடைந்த விமலா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் அவரது வாக்குமூலத்தைப் பதிவு சித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ். இவர் சுமார் ஒரு வருடமாக தனது மனைவி விமலா உடன் குருக்ஷேத்திரத்தில் வசித்து வந்தார். அவர் தனியார் நிறுவனத்தின் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் ராஜேஷின் வயிறு சுமார் 35 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கூர்மையான ஆயுதங்களால் ஆழமான வெட்டப்பட்டுள்ளது. இதனால் அவரது குடல்கள் வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையில், அவரது கல்லீரலின் கணிசமான பகுதியும் வலது சிறுநீரகமும் காணாமல் போனது தெரியவந்தது. இந்தக் காயங்கள் மற்றும் காணாமல் போன உறுப்புகள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் கொலை நடந்த இடத்திலிருந்து மூன்று கத்திகள் மீட்கப்பட்டன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல் நிலைய அதிகாரி சுரேந்தர் சிங்கும் அவரது காவல்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடம் ஆய்வு செய்யப்பட்டு, தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ். இவர் சுமார் ஒரு வருடமாக தனது மனைவி விமலா உடன் குருக்ஷேத்திரத்தில் வசித்து வந்தார். அவர் தனியார் நிறுவனத்தின் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் ராஜேஷின் வயிறு சுமார் 35 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கூர்மையான ஆயுதங்களால் ஆழமான வெட்டப்பட்டுள்ளது. இதனால் அவரது குடல்கள் வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில், அவரது கல்லீரலின் கணிசமான பகுதியும் வலது சிறுநீரகமும் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இந்தக் காயங்கள் மற்றும் காணாமல் போன உறுப்புகள் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
ஹவுஸ் ஓனரின் கூற்றுப்படி, விமலா பாரம்பரிய வைத்தியம் மற்றும் பேயோட்டுதல் தொடர்பான சடங்குகளிலும் ஈடுபட்டு வந்ததும், அதே சமயம் தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தக் கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை. மனைவியின் வாக்குமூலம், தடயவியல் சான்றுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் மூலம் அடுத்த கட்ட விசாரணை தொடங்கி, கொலை நடந்ததற்கான காரணம் மற்றும் வேறு யாரேனும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்