nihariga and manish kuptha  
க்ரைம்

“இன்னைக்கே அவன் கதையை முடிச்சிடு” - கள்ளக்காதலை கண்டித்த கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. போன் மூலம் கட்டளையிட்ட கள்ளக்காதலன்!

வழக்கம் போல நிஹாரிகா தனது ஆண் நண்பருடன் பேசியதால் மனிஷ் கண்டித்திருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் புல்கான பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய மனீஷ் குப்தா. இவர் அதே பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த நிலையில் புல்கான பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிஹாரிகா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறிய நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதில் ரியான்ஸ் என்ற மகன் உள்ள நிலையில் மனீஷ் குப்தா சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.

மகன் பிறந்த பிறகு அவரை பராமரித்து கொள்ள நிஹாரிகா தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஜம்முவை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிஹாரிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து போனில் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி நேரில் சந்தித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நிஹாரிகா எப்போதும் போனில் மூழ்கி இருந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நிஹாரிகா வேறு ஒரு ஆணுடன் வீடியோ கால் பேசுவதை பார்த்த அவரது மகன் ரியான்ஸ் இது குறித்து மனீஷ் தந்தையான ராம்கிஷோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மனிஷ் தனது மனைவியின் செயல்பாடுகளை கவனித்து போனை சோதனை செய்து பார்த்தபோது அவர் ஒரு வாலிபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனீஷ் மனைவியை கண்டித்து திருந்தி வாழ கூறியுள்ளார், இருப்பினும் தொடர்ந்து நிஹாரிகா தனது ஆண் நண்பருடன் பேசி வந்த நிலையில் கடந்த (ஜூன் 5) ஆம் தேதி மதியம் மளிகை கடைக்கு செல்லாமல் மனீஷ் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வழக்கம் போல நிஹாரிகா தனது ஆண் நண்பருடன் பேசியதால் மனிஷ் கண்டித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஹாரிகா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் மனீஷ் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் அப்போது போனில் லைனில் இருந்த அவரது ஆண் நண்பர் “இன்னைக்கே அவன் கதையை முடிச்சிடு” என கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மனீஷ் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மனீஷ் நேற்று(ஜூன் 16) அதிகாலை உயிரிழந்த நிலையில் இது குறித்து மனீஷின் தந்தை ராம்கிஷோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரான ஜம்முவை சேர்ந்த வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.