க்ரைம்

வரதட்சணைக்கொடுமையால் பெண் தற்கொலை.. தாய், மகன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை!!

வரதட்சணைக்கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தாய், மகன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Suaif Arsath

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் என்பவர் தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் கூறி பிரியா என்பவரை கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்தார்.

45 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த நிலையில், தொடர்ந்து மேலும் பணம் கொடுமைப்படுத்தியதால் பிரியா கடந்த 2013ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு இன்று மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குமாரவேல் மற்றும் அவரது தாய் மலர்கொடிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டிலிருக்கும் முதியோர் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர, அகங்காரம், கொடூர மனதால் குற்றவாளிகள் ஆகக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.