Dhadeecha tradition Dhadeecha tradition
க்ரைம்

"மகள்கள், மனைவிகளை வாடகைக்கு விடும் சந்தை!" ரூ.10,000 முதல் லட்சம் வரை.. தினம் தினம் ஆண்களால் சீரழிக்கப்படும் அவலம்

குடும்பத்தில் உள்ள எந்த ஆணும் தங்களுடைய பாலியல் இன்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள அவர்களுடன் உறவுகொள்ளலாம்.

Vinvizhi Leninton

பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும் கூட பெண்களுக்கு எதிராக பல குற்றங்களும் சுரண்டல்களும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களை வாடகைக்கு விடும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி கிராமத்தில், மனைவிகளை வாடகைக்கு எடுக்கும் வழக்கம் பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. இந்த வழக்கம் 'ததிச்சா' என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தில் ஒரு சந்தை அமைக்கப்படும், அங்கு குடும்பங்கள் தங்கள் மகள்களையோ மனைவிகளையோ வாடகைக்கு விடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆண்கள் கலந்துகொண்டு தங்களுக்காகப் பெண்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யமான விஷயம். மேலும், இதில் திருமணமான கணவன்மார்கள் கூட தங்கள் மனைவிகளை மற்ற ஆண்களுக்கு வாடகைக்கு விடுவதும் நடந்துள்ளது.

மனைவி இல்லாத செல்வந்தர்களுக்கோ அல்லது மணப்பெண் கிடைக்காத செல்வந்த ஆண்களுக்கோ பத்து, ஐம்பது அல்லது நூறு ரூபாய் போன்ற மிகச் சிறிய தொகையுள்ள முத்திரைத்தாளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு மனைவிகள் அல்லது தங்கள் மகள்களை விற்பனை செய்கின்றனர். இது ஒரு வழக்கம் என்று கூறினாலும் கூட இந்த விஷயம் ஏழ்மை காரணமாகவோ அல்லது வரதட்சணை கொடுக்க முடியாத நிலை ஆகியவற்றால் இது நடந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, தாடிச்சாவில் திருமணமான பெண்களை விட 8 முதல் 15 வயதுக்குட்பட்ட கன்னிப் பெண்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில், ஒரு ஆண் ஒரு பெண்ணை தன் மனைவியாக வைத்திருக்க விரும்பும் மணிநேரம்/நாள்/வாரம்/மாதம்/வருடம் என்ற கால அளவைப் பொறுத்து அவரது விலை நிர்ணைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன், அதே ஆண் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது வேறொரு ஆணுடன் புதிய ஒப்பந்தம் செய்து, அந்த பெண்ணை ஒரு புதிய நபருக்கு வாடகைக்கு விடலாம் என்பதும் நடந்துள்ளது.

பொதுவாக, ஒரு பெண்ணின் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது. பெண் எவ்வளவு இளமையாக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவரது குடும்பத்தினர் முன்மொழியும் விலை அதிகமாக இருக்கும். சில சமயங்களில், மணப்பெண் அழகாகவும், உடல் ரீதியாக கவர்ச்சியாகவும், கன்னியாகவும் இருந்தால், அந்த பெண்ணின் விலை 2 லட்சம் ரூபாய் வரை கூட மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கன்னித்தன்மை இல்லாத பெண்களுக்கு, அவர்களின் வயது, தோல் நிறம் மற்றும் ஒப்பந்தத் திருமணங்களின் ஒரு பகுதியாக அவர்கள் இதற்கு முன்பு உறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 6 வயது சிறுமிகள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தரவுகள் கூறுகின்றனர்.

இதுபோன்று சந்தைகளில் விற்கப்படும் பெண்களை 'பரோ' அல்லது 'மோல்கி' என்று குறிப்பிடப்படுகிறார்கள், இதன் பொருள் 'விலைமதிப்பற்றவள்' என்பதாகும். இந்த இளம் பெண்கள் தங்களை விலைக்கு வாங்கிய ஆண்களாலோ அல்லது கணவர்களால் மட்டுமல்ல, குடும்பத்திற்குள்ளேயே பல ஆண்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தில் உள்ள எந்த ஆணும் தங்களுடைய பாலியல் இன்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள அவர்களுடன் உறவுகொள்ளலாம் என்றும் சில வீடுகளில், மாமனார் கூட அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக அவர்கள் தரப்பில் கூறப்படுவது, "இதற்குத்தானே பணம் கொடுத்து வாங்கியுள்ளோம்" என்பதே.

தற்போது இந்த கிராமத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி, வழக்கு பதிவும் செய்துள்ளனர். மேலும், தற்போது இதுபோன்ற செயல்கள் ஏதும் அங்கு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் திரைக்கு பின்னால் கூட நடக்கலாம் என்றும் பல்வேறு நபர்களால் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.