க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்கள்...

Malaimurasu Seithigal TV

இராமநாதபுரம் | பரமக்குடி வைகைநகரில் வசிக்கும்    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரமக்குடியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன், ராஜா முகமது, ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலும் பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்  இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திபாபு உத்தரவிட்டார்.  

அதனை தொடர்ந்து இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் 5பேரும் ஆஜர்படுத்த படுத்தப்பட்டனர். சிபிசிஐடி சார்பில் ஆய்வாளர் கீதா ஆஜராகினார் . இவ்வழக்கு விசாரணைகாக சிபிசிஐடி தரப்பில் 5நாட்கள் கேட்ட நிலையில்  5பேருக்கும் மூன்று  நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மகளீர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.