தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூ சந்தை அருகே 20 கண் பாலம் அமைந்துள்ளது. இங்கு இன்று பிற்பகல் கைக்குழந்தை, 6 வயது சிறுவன்,14 வயது சிறுமியுடன் ஒரு தாய் கல்லணை கால்வாய் கரையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென குழந்தைகளுடன் தாய் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக ஆற்றில் குதித்து அத குடும்பத்தினரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் தாய், 14 வயது சிறுமி, 6 வயது சிறுவன் ஆகியோரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது.
கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில்,தகவல் அறிந்து தஞ்சை தாலுகா காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி யார் இவர்கள்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கை குழந்தையின் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.