young man murder 
க்ரைம்

விருதுநகர்: காதலியை கைவிட மறுத்த இளைஞர்..! “ஓட ஓட வெட்டிய கொடூரம்..!

விஜய்யிடம் நேற்று தான் வேலை செய்யும் பட்டாசு ஆலைக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி அழைத்ததாக கூறப்படுகிறது...

மாலை முரசு செய்தி குழு

சாத்தூர் அருகே ஒத்தையால் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் சங்கரேஸ்வரன்(24) இவர் இந்த பகுதியில் பட்டாசு தொழிற்சாலை வேலை செய்து வருகிறார். மேலும் சங்கரேஸ்வரனுடன் அவருடைய உறவினரான சிங்கேஸ்வரனும் பட்டாசு ஆலையில் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கேஸ்வரனும் ஒத்தையால் அருகே உள்ள கண்மாய் சூரங்குடியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிங்கேஸ்வரனின் காதலுக்கு அந்த இளம் பெண்ணின் மாமா விஜய் (எ) விஜயபாண்டி(23) எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காதல் விவகாரம் தொடர்பாக விஜய் சிங்கேஸ்வரனை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தன்னுடைய காதலியின் மாமா விஜய் தன்னை மிரட்டி வருவதாக நண்பன் சங்கரேஸ்வரனிடம் சிங்கேஸ்வரன் கூறி உள்ளார்.

இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் தொடர்பாக சங்கரேஸ்வரன் விஜய்யிடம் நேற்று தான் வேலை செய்யும் பட்டாசு ஆலைக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மற்றும் சங்கரேஸ்வரன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது சிங்கேஸ்வரன் தன்னுடைய காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது 

இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண்ணின் மாமாவான விஜய் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சிங்கேஸ்வரனை அரிவாளால் வெட்ட  முயன்ற போது சங்கரேஸ்வரன் அவர்களை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த விஜய் தரப்பினர் சங்கரேஸ்வரனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தாலுகா போலீசார் வெட்டி கொலை செய்யப்பட்ட சங்கரேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொலை செய்யப்பட்ட சங்கரேஸ்வரனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் போலீஸார் அப்பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீஸார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் தாயில்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த கோவில்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி(24) மற்றும் விஜய் (எ) விஜயபாண்டி(23) மற்றும் அபி(25) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் சங்கரேஸ்வரனை கொலை செய்தது தெரிய வந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.