சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் உள்ள நாச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி கிருஷ்ணம்மாள் இவர்களுக்கு 41 வயதில் முருகன், 39 வயதில் சின்ன திருப்பதி என்ற இரண்டு மகன்களும் முத்து பொன் என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் முருகனுக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி முருகன் தனது மனைவியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இளைய மகன் சின்ன திருப்பதிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தாய் தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார்.
முருகன் அடிக்கடி கட்டிட வேலைக்கு வெளியூர் சென்று விடும் நிலையில் இவரது தம்பி சின்ன திருப்பதி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அடிக்கடி முருகன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வந்த திருப்பதி நாளடைவில் அண்ணியிடம் பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். தொடர்ந்து பணம் வாங்கி திருப்பதி குடிப்பதால் செல்வி அவருக்கு பணம் தர மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அண்ணனின் மனைவி செல்வியிடம் பணம் கேட்டு திருப்பது அடிக்கடி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். எனவே இது குறித்து செல்வி தனது கணவர் முருகன், தனது தம்பி மணிகண்டன் மற்றும் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சின்ன திருப்பதி அண்ணன் முருகன் வீட்டிற்கு சென்று செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மற்றும் அவரது குழந்தை சத்தம் போட்டு உள்ளனர். எனவே திருப்பதி அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இது குறித்து செல்வி மீண்டும் அவரது தம்பியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உடனடியாக செல்வி வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் அவரது பெற்றோர் வீட்டில் இருந்த திருப்பதியை அங்கிருந்து தனியாக இழுத்துச் சென்று அங்குள்ள பெரியாண்டிச்சி கோயில் அழைத்து சென்று கண்டித்துள்ளார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் திருப்பதி தலையை பிடித்து சுவற்றில் மோதி விட்டு அங்கு இருந்து சென்று விட்டார். இதன் காரணமாக தலையில் பலத்த காயம் அடைந்த சின்ன திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜலகண்டாபுரம் போலீசார் சின்ன திருப்பதியில் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.