பரமக்குடியில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் அதிகள் அளவில் முன்பகை காரணமாகவோ அல்லது வாக்குவாதத்திலோ, மதுபோதையிலோ இளைஞர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட திருச்சி காவலர் குடியிருப்பினுள் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியை சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 25).
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. இவர் பிளக்ஸ் போர்டு பிரின்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு முத்தாலம்மன் கோவில் அருகே உள்ள மார்க்கெட் வீதியில் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மூவர் கார்த்திக் உடன் தகராறு செய்துள்ளனர். அப்போது கத்தியால் கார்த்திகை குத்த முற்பட்ட போது அவர் தப்பித்து ஓடி உள்ளார்.
தப்பித்து ஓடிய கார்த்திக்கை தொடர்ந்து வந்த மூவரும் விரட்டி விரட்டி கார்த்திக்கின் பின்னந்தலையில் அரிவாளால் வெட்டியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.