க்ரைம்

காலிங் பெல்லை சரி செய்ய போய், கால் தடுக்கி விழுந்த வாலிபர் பலி...

காலிங் பெல் சரி செய்ய மூன்றாவது மாடிக்கு பைப்லைன் வழியாக மாடிக்கு சென்ற வாலிபர் கால் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் | நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பா கவுண்டர் தெரு, வி ஐ பி நகர் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (வயது 30) இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்று உள்ளது நேற்று நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாத நிலையில் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார்.

போன் எடுக்காத நிலையில் மூன்றாவது மாடிக்கு பைப்லைன் வழியாக  பின்புறமாக ஏறி மாடிக்கு சென்றுள்ளார் அப்போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

கணவர் வெகுநேரமாகியும் வரவில்லை என்று புனிதா அண்ணனுக்கு போன் செய்துள்ளார்  அப்பொழுது அவருடைய அண்ணன் அங்கு வந்தபோது தென்னரசுக்கு  போன் செய்துள்ளார்.

பின்புறத்தில் இருந்து சத்தம் வந்ததால் அங்கு சென்று பார்த்த போது தென்னரசு ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துபின்னர் அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்றம்பள்ளி அருகே நள்ளிரவில் வீட்டுக்கு வந்த இளைஞர் வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாது நிலையில் மாடி வழியாக ஏறி சென்ற போது தவறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.