செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு கோபி மற்றும் குபேந்திரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்பவருக்கு தமிழரசன், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் இந்த இரண்டு குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அப்பொழுது கிருஷ்ணன் என்பவரது மகன் கோபிக்கும் சௌந்தரின் மகன்களான தமிழரசன் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது கோபியின் சகோதரர் குபேந்திரன் தனது சகோதரர் கோபிக்கு ஆதரவாக பேசிய நிலையில் தமிழரசனுக்கு ஆதரவாக அவரது மைத்துனர் சென்னை பகுதியை சேர்ந்த சுமன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே குபேந்திரன் சுமன் மீது கட்டையால் பலமாக தாக்கி உள்ளார். இதில் சுமன் பலத்த காயங்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோபி குபேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சுமன் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய உள்ளார். அதே நேரத்தில் குபேந்திரன் மற்றும் கோபி ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
இதனை அறிந்த சுமன் அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நேற்று மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அனால் அப்போது கோபி மற்றும் அவரது சகோதரர் குபேந்திரன் ஆகிய இருவரும் கிராம புறத்தில் இல்லாததால் இருவரையும் சுமன் தேடி வந்துள்ளார். பின்னர் இருவரும் கிடைக்காததால் சுமன் மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு அங்கேயே தங்கி விட்டு இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கருங்குழி அடுத்த ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது சந்தோஷ் கண்ணன் உள்ளிட்ட 5 பேர் அவரை பின் தொடர்ந்து வந்து அரிவாளால் பலமாக தாக்கி உள்ளனர்.
இதில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் சுமன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுராந்தகம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு யார் கொலை செய்தது, பழிக்கு பழி சம்பவமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அரசு பள்ளி வாயின் முன்பு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.