thiruvallur murder  
க்ரைம்

“காதலியிடம் பேச போன் இல்லை..” அதுக்காக இப்படியா..!? ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்!! 24 வயது இளைஞரின் வெறிச்செயல்!!

ஆனால் மேலே சென்றவர் நெடு நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்....

மாலை முரசு செய்தி குழு

சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது.  அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். அப்படி ஒரு சம்பவம்தான் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில்தான் சரஸ்வதி தன்னுடைய வீட்டின் மேல் போர்ஷனை வாடகைக்கு விட்டுள்ளார். எனவே அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக மாடிக்கு சென்றுள்ளார். ஆனால் மேலே சென்றவர் நெடு நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சரஸ்வதி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் சரஸ்வதி இறக்கும்போது, அவர் அணிந்திருந்த தோடு, செயின் எதையும் காணவில்லை. ஒருவேளை இந்த கொலை நகைக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அப்போதுதான், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்ற வாலிபர் சரஸ்வதியை கொலை செய்து நகை பறித்து கொண்டு தப்பியது தெரிய வந்தது. சரஸ்வதி செல்போனில் இரண்டு புதிய நம்பருக்கு பேசி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அத்தகைய நம்பர்களை ஆராய்ந்தனர். அதில், அந்த போன் சிக்னல் சென்னை அரும்பாக்கம் பகுதியில் காட்டியுள்ளது. அப்பகுதியில் ஆட்டோவில் படுத்திருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அதில் வெங்கடேசன் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது. தனது செல்போன் உடைந்ததால் மாத தவணை கட்டுவதற்கு முடியாமல் இருப்பதாலும், தன் காதலிக்கு செல்போன் பேசுவதற்கு இல்லாததால் சரஸ்வதியின் நகைகளை கொள்ளை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்காக திட்டமிட்டு சரஸ்வதி வரும் நேரத்தில் அப்போது தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரஸ்வதியை அந்த வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து வெங்கடேசன் அடகு வைத்த நகைகளை போலீசார் மீட்டு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். புதிய செல்போன் வாங்குவதற்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொலை செய்து அவர் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.