திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ வளாகத்தில் கழனிவாசல்பட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா (30) என்பவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சுகன்யாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கஸ்பா பொய்கைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் திடீரென சுகன்யா செங்கல்பட்டிற்கு வேலைக்கு செல்லவே கடந்த 15 தினங்களாக தினேஷ்சுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் செங்கல்பட்டிற்கு சென்று சுகன்யாவை நேரில் சந்தித்து பின்னர் அவரை அங்கிருந்து மணப்பாறைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் தினேசை பிடிக்கவில்லை என்றும் தன்னிடம் பேசக்கூடாது என்றும் நான் சென்னைக்கு செல்ல வேண்டும் என்னை திருச்சியில் விட்டு விடு என்று கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சுகன்யாவை இருசக்கர வாகனத்தில் வைத்து திருச்சி அழைத்துச் சென்று கொண்டிருந்த போது சிட்கோ அருகே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் அடைந்த தினேஷ் வாகனத்தை நிறுத்தி சுகன்யாவை அவரின் துப்பாட்டவால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடலை அங்கேயே விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தினேஷ்சை மணப்பாறை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் தான் இந்த தகவல் தெரியவந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.