ராமநாதபுரம் அருகே கருங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள் ராஜா, நேற்று இரவு சென்னை செல்வதற்காக தன் மனைவி அபிநயா மற்றும் பத்து மாத ஆண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் லாந்தை காலனி பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே ராமநாதபுரத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தாய் தந்தை இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், பத்து மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக குழந்தையை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் இதனை ஏற்றுக் கொண்ட நிலையில்
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, குழந்தைகளை அழைத்துச் செல்லும் இன்குபேட்டர் வசதியுடன் குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது, ராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கானஆம்புலன்ஸ், இரவு பணியாளர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில்.பின்னர் முதுகுளத்தூரில் உள்ள குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு வந்தது.
உடனடியாக குழந்தையை ஏற்றிச்செல்ல இன்குபேட்டருடன் ஆம்புலன்ஸ் வந்தது. குழந்தையை பார்த்த மருத்துவ உதவியாளர் இது 10 மாத குழந்தை, பிறந்த குழந்தை ஐந்து கிலோ கீழ் எடை இருந்தால் மட்டுமே இந்த வாகனத்தில் உள்ள இன்குபேட்டரில் ஏற்றிச்செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் உறவினர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சலசலப்பு ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ள 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பத்து மாத குழந்தை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அருண் ராஜா உறவினர்கள் ஏராளமான மருத்துவமனையில் கூடினர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்ட நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது . இரவு நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க உடனடியாக பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அவசர சிகிச்சை பிரிவு அருகே நிறுத்தப்பட்டனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக, தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தலையில் காயமடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமலும், சரியான ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தாமலும் இருந்தது அப்பகுதி மக்களிடையேயும், குழந்தையின் உறவினர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்