தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கரம்பை, ஆலங்குடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் புறவழிச்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொட்டி காய வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக 2 ஆயிரம் நெல் மூட்டைகளும் முழுவதுமாக மழையில் நனைந்துள்ளன.
மேலும் படிக்க | நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்தி வழங்க கோரிக்கை...! போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...!
இதேபோல் நாகை மாவட்டம் நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திட்டச்சேரி, திருமருகல், திருக்குவளை, கீழ்வேலூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக நெற் கதிர்கள் வயலிலேயே சாய்ந்தும் தண்ணீரால் சூழப்பட்டு சேதமடைந்துள்ளன.
அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அரசு உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | கனமழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும் விவசாயிகளும்...!