பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழம் விழுது தன்னார்வ அமைப்பு மற்றும் சுவாமி விவேகானந்தா ரத்ததான குழு ரோட்டரி கிளப் இணைந்து மாபெரும் மினி மாரத்தான் போட்டி ஐந்து பிரிவுகளாக கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் இருந்து இன்று காலை துவங்கியது.
இந்த போட்டியை பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபால கிருஷ்ணன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
மேலும் படிக்க | வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் ஒரு லட்சம் லட்டுகள்...
இதில் ஐந்து வயது முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமும் 11 வயது முதல் 13 வயது வரை 4 கிலோ மீட்டர் தூரமும் 14 வயது முதல் 17 வயது வரை 6 கிலோமீட்டர் தூரமும் ஆண்கள் பொது பிரிவில் 12 கிலோமீட்டர் தூரமும் பெண்கள் பொது பிரிவில் எட்டு கிலோமீட்டர் தூரமும் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வந்த 5 நபர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.