புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள மேல்அழிஞ்சிபட்டு கிராமத்தில் மீனா என்கிற பெண் 1000க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகின்றார்,இந்த வாத்துக்களை கொண்டு தான் இவர் தனது குடும்பத்தை கவனித்து வருகின்றார்.
மேலும் படிக்க | புலி தாக்கியதில் 2 மாடுகள் பலி...
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை தனது வாத்துக்களை பாகூர் சேலியமேடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மெய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
இதில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மெய்ச்சலில் இருந்த வாத்துக்கள் ஒன்றின் பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழக்க தொடங்கியது, இதில் சுமார் 400 வாத்துக்கள் வயல் வெளியில் உயிரிழந்தது.
இதனை பார்த்த மீனா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
அப்போது வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள், இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்த வாத்துகளை கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தலையணை அருவியில் குளிக்கத் தடை விதிப்பு...