மாவட்டம்

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ...

குடியரசுத் தலைவரின் வருகையை யொட்டி குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

நீலகிரி | குன்னுார் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு நாளை மறுதினம் குடியரசுத் தலைவர்  திரெளபதி மூர்மு வருகை யொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் குடியரசு தலைவர் திரெளபதி மூர்மு நாளை கோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பின், நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதால் 5 அடுக்கு பாதுகாப்பு  போடபட்டுள்ளது.

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 க்கு மேற்பட்ட காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.