மாவட்டம்

நான் பாக்காத பாம்பா? பாம்ப பொம்மையா வச்சு விளையாடின பரம்பரை டா நாங்க...!!!

பக்கத்து வீட்டில் நுழைந்த சாரைப்பாம்பை ஒன்பது வயது சிறுவன் சிறிதும் பயம் இல்லாமல் பிடித்து டப்பாவில் அடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

கர்நாடகா | தும்கூரு மாவட்டம் குணிகல் நகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மகந்தேஸ் இவரது மகன் சம்ரட் வயது 9. சிறு வயது முதலே தனது மகனுக்கு மகந்தேஸ் பாம்புகளை எவ்வாறு பிடிப்பது என பாடம் எடுத்து வந்துள்ளார்.

தந்தையுடன் பாம்புகள் குறித்து நல்ல அறிவை வளர்த்துக்கொண்ட சம்ரட் தனது தெருவில் உள்ள வீட்டின் ஒன்றில் பாம்பு வந்துள்ளதை அறிந்து தந்தை வீட்டில் இல்லை என்றதால் அங்கு தனியாக அங்கு சென்று இது விசம் இல்லாத சாரை பாம்பு என தெரிவித்து அதை தந்தையிடம் தெரிவித்துள்ளான்.

அதேசமயம் தந்தை அங்கு வந்து விட தனது மகனை தனியாக இந்த சாரை பாம்பை பிடித்து பெட்டியில் அடைக்க கூறியுள்ளார். அதை அடுத்து 9 வயது சிறுவன் சிறிதும் அச்சம் இல்லாமல் முதன்முறையாக தந்தையின் உதவி இல்லாமல் தானாகவே பாம்பை பிடித்து பெட்டியில் அடைத்தான்.

சிறுவனின் அச்சமில்லாத செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.