மாவட்டம்

பூங்காவிற்கு குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்...

Malaimurasu Seithigal TV

மேட்டூர் அணை காவிரி ஆற்றில் குளித்து பின்பு பூங்காவிற்கு சென்று சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் காவிரியில் நீராடிவிட்டு அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் பூங்காவிற்குச் சென்று ஓய்வெடுத்தனர்.

சிறுவர் சிறுமிகள் பூங்காவில் உள்ள தூரி, சறுக்கல் விளையாடி மகிழ்ந்தனர். பாம்புப் பண்ணை ,முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றைக் கண்டு ரசித்தனர்.