பருவ மழை சமாளிப்பதற்காகவும், மழை நீர் அதிகப்படியான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் சென்னை மாநகராட்சியால் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலைகளுக்கு அருகாமையில் மழைநீர் வடிகால்கள் பணி நடைபெற்று வருவதால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் என அனைவரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கே.கே நகர் சாலையில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், சாலையின் இடையில் ஒரு புறம் மட்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிறுத்தம் அருகில் பணிகள் நடைபெற்று வருவதால், பேருந்துக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பேருந்துகளும் சரிவர நின்று செல்வதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சாலையோர கடை வியாபரிகளும், தங்களின் வியாபாராம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற பணிகள் நடக்கும் பகுதியில் பாதசாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு பாதுகாப்பான மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது
பெருவாரியான பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்தும் இந்த கே.கே. நகர் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: விமர்சையாக தொடங்கிய கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்....!!!