மாவட்டம்

பாம்பன் சாலையில் விபத்து...! இரண்டு அரசு பேருந்துகள் மோதல்...!

Malaimurasu Seithigal TV

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசு 
பேருந்தும், திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் 
பாம்பன் சாலை பாலத்தில் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை இழந்து  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்துகளில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ராமேஸ்வரம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் இருவேறு விபத்துக்கள் 
நிகழ்ந்து பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், தற்போது மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.