மாவட்டம்

காட்டுத்தீயை அணைக்க விரைந்தது விமானப்படை ஹெலிகாப்டர்...!!

Malaimurasu Seithigal TV

கோவை நாதே கவுண்டன்புதூர் மலைப்பகுதியில் தீயை அணைக்க சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து தீ அணைக்க முடியாமல் கோவை வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீயை அமைப்பதற்காக நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளனர். 6:45 மணி அளவில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதற்காக வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் தண்ணீர் எடுத்து வருவதற்காக  கேரள மாநிலம் மலம்புழா அணையை நோக்கிச் ஹெலிகாப்டர் சென்றுள்ளது.