மாவட்டம்

டிராக்டரில் ஊர்வலம் வந்து அருள்பாலித்த ஐயப்பன்...

மத்தாப்புகள், பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் கும்மியடித்தும் உற்சாகமாக நடைபெற்ற வீதி உலாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை | ஆலங்குடி நகரில் பழைமையான ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளதுகார்த்திகை மாதம் தொடங்கியது முதலே பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டு வழிபாடு, திருவிளக்கு பூஜை என பல்வேறு வழிபாடுகள் ஒரு மாதத்துற்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று ஐயப்பன் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றதுஅலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருள வீதி உலா உற்சவம் மாலையில் தொடங்கி ஆலங்குடி நகரின் ஒவ்வொரு தெருவின் வழியாகவும் சென்றது.

இரவு நேரத்தில் ஆலங்குடி நகரின் பிரதான பகுதிகளான வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா வந்த போது நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என சாலைகளே ஸ்தம்பிக்கும் அளவிற்கு வீதி உலா வெகு உற்சாகமாக நடைபெற்றது.

வடகாடு முக்கம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வீதி உலாவை வரவேற்கும் விதமாக மத்தாப்புகள் கொளுத்தி உற்சாகமாக ஐயப்பனை வரவேற்றனர்அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கும்மியடித்து ஐயப்பனை பூர்வீக முறைப்படி வழிபட்டனர்வீதி உலாவிற்கு ஆலங்குடி போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.