மாவட்டம்

கோலப் போட்டியில் அசத்திய பெண்கள்... பரிசாக தங்க காசு...

மகளிர் தின விழா கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு கோலங்களை போட்டு அசத்தினர்.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி | கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண, வண்ண கோலங்களை வரைந்து அசத்தினர்.

இதையெடுத்து சிறந்த கோலங்களாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியி;ல் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. மருத்துவர் லதா, கரிசல் இலக்கிய அமைப்பின் தலைவர் ராஜகோபால் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.