மதுரை மாவட்ட காவல்துறை
வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் தயாராக இருக்கக்கூடிய சூழ்நிலையில் மதுரை மாநகர காவல் துறை கொரானா தொற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது அதன் அடிப்படையில்
பொது இடங்களில் கூட்டத்தைக் கூட்டுவதை தவிர்த்து விட்டு இல்லங்களில் புத்தாண்டை கொண்டாடுவதே சாலச் சிறந்தது என அறிவுரை வழங்கி உள்ளது.நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் எந்தவித கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1400-க்கும் மேற்பட்ட போலீசார் நகப்பகுதிகளில் எந்நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும்
இளைஞர்கள் வாகனத்தை அதிவேகமாக செலுத்துவது தெரிந்தால் உடனடியாக வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும்
மது அருந்தி இருக்கக் கூடாது வழிபாட்டு தலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மதுரை மாநகர காவல்துறை உத்தரவு