மாவட்டம்

விபத்தால் ஏற்பட்ட தகராறு... 1 மணி நேரமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து...

கார் மீது வேன் மோதி விபத்தானதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே 1 மணி நேரம் வரை தகராறு ஏற்பட்டுள்ளத்ஹு.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் | பழவேற்காட்டில் இருந்து கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றி கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. பொன்னேரி அருகே கள்ளுகடைமேடு பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நின்றதால் கார் மீது வேன் மோதியது.

இதில் காரின் பின்பகுதியும், வேனின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனால் கார் டிரைவருக்கும், வேன் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் இரண்டு வாகனங்களையும் அப்புறத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. கார் மீது வேன் மோதிய விபத்தால் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பு நிலவியது.