அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை திருச்சி முக்கொம்பூர் நோக்கி கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி வேன் மனகெதி சுங்கசாவடி அருகே சென்ற போது ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்து சுங்க சாவடி ஜெனரேட்டர் அறை சுவற்றில் மோதியது.
இதில் வேனில் பயணித்த 11 மாணவ -மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை காயமடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்