மாவட்டம்

நடிகர் வடிவேலுவின் குலதெய்வக் கோவிலை அபகரிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு...

தனி நபர் ஒருவர் தங்கள் கோயிலை அபகரிக்க முயற்சிப்பதாக கோயில் நிர்வாக டிரஸ்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை தனி நபர் அபகரிக்க முயற்சி செய்வதாக கோயில் நிர்வாகிகள் உதவி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியில் அருள்மிகு அய்யனார் கோவில் என்ற திருவேட்டை உடைய அய்யனார் சுவாமி திருக்கோவில் உள்ளது. நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலாகும்.

இந்த கோயிலின் பரம்பரை நிர்வாக டிரஸ்டியாக பாக்யராஜ் உட்பட மூன்று பேர் உள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து குலதெய்வ குடிமக்களும், பக்தர்களும் ஒற்றுமையாக சேர்ந்து மாசி மகா சிவராத்திரி விழா நடத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு இக்கோயிலை குலதெய்வமாக வணங்காத தனிநபர் தங்கமணி என்பவர் சிவராத்திரி ஏற்பாடுகளை செய்து வருகிறார். கோயில் நிர்வாகி டிரஸ்டியாகிய எங்களை கோவிலுக்குள் விடாமல் கோயிலை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கோயிலுக்குள் வந்தால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார். எனவே தங்கமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் டிரஸ்டி நிர்வாகிகள் இன்று பரமக்குடிய உதவி ஆட்சியர் அப்தாப் ரசூலிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயில் டிரஸ்டி நிர்வாகிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  கோயிலை அபகரிக்க முயல்வதாக அளிக்கப்பட்ட புகாரால் உதவி ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.