மாவட்டம்

கட்டப்படும் தரமற்ற வீடுகள்....ஆய்வு கோரிக்கை!!!

Malaimurasu Seithigal TV

அரக்கோணம் அருகே இருளர் இன மக்களுக்காக கட்டப்படும் வீடுகள் தரமற்று இருப்பதால் அவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினி பேட்டை பகுதியில், சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் வசிக்கும் 41 இருளர் இன குடும்பங்களுக்கு,  தலா 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கட்டடங்கள் தரமற்று நிலையில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  எனவே கட்டங்களை மாவட்ட ஆட்சியர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

-நப்பசலையார்