ஒட்டியம்பாக்கம் அருகே, பழமைவாய்ந்த ஒட்டீஸ்வரர் கோயிலில் பாலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஒட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக நன்மை வேண்டி ஆண்டுதோறும் பாலாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 31-ம் ஆண்டு பாலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை ஒட்டி, 208 பேர் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பாலைக் கொண்டு ஒட்டீஸ்வரர் சுவாமிக்கும், மங்களாம்பிகை அம்மனுக்கும், பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் செய்தனர்.
-நப்பசலையார்